தாதன்குளம் கண்மலை அப்போஸ்தல கிறிஸ்தவ சபை யின் சார்பில் விடுமுறை வேதாகம வகுப்பு நடந்து வந்தது.
அதில் மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்தவ போதனை போதிக்கப்பட்டது. அதன் பின் வினாடி வினா நடந்தது. இறுதி நாளில் பவனி நடந்தது. இந்த பவனி தாதன்குளத்தில் முக்கிய வீதி வழியாக மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது. இந்த பவணிக்கு பாஸ்டர் மரியதாஸ் தலைமை வகித்தார். பாஸ்டர் ஜோசப் சாமுவேல், பாஸ்டர் அகஸ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் பிரவீனா, ஜெனட், சுனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.