5.9.2026 தூத்துக்குடி ரிதம் கரோக்கி ஸ்டுடியோவில் குமிழ்முனை பதிப்பகத்தின் ஆசிரியர் தின விழா மற்றும்
குமிழ்முனையின் புத்தக வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக
” எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமாரசு” மற்றும் ” எழுத்தாளர் சேதுபாலா” நூல்களை
வெளியீட்டு சிறப்புரையாற்றினார்.
சூடாமணி அவர்களின்” நெல்லை பேசுகிறது”
ஈஸ்வரன் அவர்களின் ” மனதோடு சில நேரங்கள்” , அப்ரமேய செழியன் அவர்களின்
” துண்டிக்கப்பட்ட நாக்குகள்” , தீனதயாளன்
அவர்களின் “புன்னகைக்கு பின்னால்” ,
தாமோதரன் அவர்களின் “முச்சந்தி” ஆகிய
ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டது இந்நூலிற்கான மதிப்புரையை ஆவுடையலட்சுமி,வனிதா, ரமேஷ்,பிரபாவதி,சரஸ்வதி,ஐ.ரா.யாழினி,
ஸ்ருத்திகா ஆகியோர் வழங்கினர். நெடுஞ்சாலை கவிஞர்
செல்வராஜ் அவர்கள் ஆசிரியர் தின கவிதையை வாசித்தார் நிகழ்விற்கான
வருகை புரிந்த ஆசிரியர்களுக்கு
குமிழ்முனை பதிப்பகம் ஆசிரியர் தின சிறப்பு
பரிசு வழங்கியது. இறுதியாக குமிழ்முனை சைமன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


