இன்று முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபா, முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலய பக்த ஜன சபா சார்பில் என்னுடைய தலைமையில் அமைச்சர் மதன் ராஜ் அவர்களைச் சந்தித்தோம்.
எங்களைச் சந்திக்க வைக்க வழக்கறிஞர் ரவி அவர்களும், ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் அவர்களும் உதவினார்கள். லட்சுமி நரசிம்மர் ஆலய கைங்கர்ய சபா தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சுவாமிநாதன், அறங்காவலர் சேஷப்பன், ராமவிநாயகர் ஆலய அறங்காவலர் வள்ளி ஆகியோர் என்னுடன் வருகை புரிந்தார்கள். அமைச்சருக்கு மாலை அணிவித்து, கெளரவித்து, வாழ்த்துப் பாடல் பாடி, லட்சுமி நரசிம்மர் படத்தைப் பரிசாகக் கொடுத்தோம். அவசரத் தேவையாக வரும் பக்தர்களுக்குக் கோவில் வளாகத்தில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். கோவிலைக் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது; அதை விரைவுபடுத்த வேண்டும் என மனு கொடுத்தோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியை அரசு நடத்த வேண்டும். உழக்குடியில் அரசு உறுதி செய்த தொல்லியல் தளத்தில் அகழாய்வு செய்ய வேண்டும். தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாநகராட்சி மூலம் ₹58 கோடியில் நடைபெறவுள்ள பணியை மறுசீராய்வு செய்ய வேண்டும். தாமிரபரணி வரைவுத் திட்டத்தையும், மண்டபங்கள், படித்துறைகளைச் சீரமைக்க வரைவுத் திட்டம் பெற்று, அதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஜல் ஜீவன் திட்டம் மூலம் சாக்கடை கலக்காத தாமிரபரணியாக மாற்ற வேண்டும் என்பது உட்படப் பல கோரிக்கைகள் குறித்துப் பேசினோம்.
அமைச்சர் தாமிரபரணி பற்றி விரிவான தகவல் அறிக்கை ஒன்றை உடனே தருமாறு கோரினார். அதற்கான நடவடிக்கை எடுத்து, அந்தத் தகவலை அமைச்சர் வசம் ஒப்படைத்தோம். விரைவில் இந்தக் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.
அமைச்சருக்கும், அமைச்சரைச் சந்திக்க உதவிய தம்பிமார்கள் கிங் தேவேந்திரன், பாபு அவர்களுக்கும், அமைச்சரின் உதவியாளர் வினோத் அவர்களுக்கும் நன்றி! புகைப்படம் எடுத்துக்கொடுத்த தம்பி கலியாவூர் பரமசிவன் அவர்களுக்கு நன்றி.
– முத்தாலங்குறிச்சி காமராசு


