கனிமொழிக்கு வாக்களித்தால் தூத்துக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெறும் என செய்துங்கநல்லூரில் கனிமொழிக்கு வாக்கு சேகரித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஹைதர்அலி பேச்சு.
தூத்துக்குடி நாடாளுமன்றத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஹைதர்அலி செய்துங்கநல்லூரில் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,
தூத்துக்குடி நாடாளுமன்றத்தொகுதி கனிமொழியால் நட்சத்திர நாடாளுமன்றத் தொகுதியாக மாறும். கலைஞர் தமிழ்நாட்டை நல்லதொரு பூமியாக மாற்றினாரோ அதே போல் இந்த தூத்துக்குடியையும் மாற்றுவார். இந்த தூத்துக்குடி மக்களின் குரலை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வார். மேலும் நீங்கள் கனிமொழியை வெற்றிபெறச்செய்தால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பார். என பேசினார்.
தமுமுக மாவட்ட செயலாளர் யூசுப், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மோத்தி முசம்பல், திமுக விவசாய அணி செயலாளர் குமார், டாக்டர் கலீல் ரகுமான், கருங்குளம் ஒன்றிய செயலாளர் ஒலிபிக் மீரான் , எம்.பி. முத்து சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


