
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நெல்லை மற்றும் தாமிரபரணியின் சிறப்புகள் பற்றிய கருத்தரங்கு நடந்தது.
தூயயோவான் கல்லூரி வேதிசிரோன்மணி கலையரங்கத்தில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி தலைமை வகித்தார். வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நெல்லை மற்றும் தாமிரபரணியின் சிறப்புகள் குறித்து பேசினார். வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவன் கோபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். மாலை நேர ஒருங்கிணைப்பாளர் ஜெயசுந்தர்சிங் வாழ்த்துரை வழங்கினார். டாகடர் தேவராஜ் , செய்துங்கநல்லூர் நூலகர் துரைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி சண்முகபிரியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை நூலகர் ஜாஷ்வா கிருபாகரன் செய்திருந்தார்.