தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரைச் சீரான முறையில் வெளியேற்றுவது தொடர்பாக, மழைநீர் வடிகால் கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா ஐ.ஏ.எஸ். முன்னிலையில் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கும் மழைநீரைச் விரைவாக வெளியேற்றுவது குறித்து வடக்கு கடற்கரை சாலை, தெற்கு கடற்கரை சாலை, எஸ்.ஆர்.எம். சாலை, ஜார்ஜ் சாலை, காமராஜ் கல்லூரி சாலை, சிவந்தாகுளம் சாலை, பிரையன்ட் நகர் 12-வது தெரு சாலை, ஸ்டேட் வங்கி காலனி உள்ளிட்ட பின்வரும் முக்கியச் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை ஆட்சியர் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டல வளாகத்தில் மழைக்காலங்களில் மாநகரப் பகுதிகளில் தேங்கும் மழைநீரைச் சீரான முறையில் வெளியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது மாநகராட்சி பொறியாளர் திலகம், மாநகர நல அலுவலர் மருத்துவர் கணேஷ், சுகாதார அலுவலர் ஹரி கணேஷ் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


