26.07.2026 அன்று அலையாத்திக் காடுகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் பகுதியில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் பகுதியில், அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா மற்றும் வன அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் தூத்துக்குடி வனக்கோட்டம் மூலம் வளர்க்கப்பட்ட அலையாத்திக் காடுகளைப் பார்வையிட்டு, அவற்றின் வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கப் பணிகளை நேரில் கண்டனர்.

மேலும், அகத்தியமலை மக்கள் சார இயற்கைவள காப்பக மையம், மணிமுத்தாறு, முத்துநகர் இயற்கை சங்கம், தூத்துக்குடி, கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை, ஓங்கல் சூழல் பாதுகாப்பு அமைப்பு, காயல்பட்டினம், மற்றும் வ.உ.சி. கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மொத்தமாக சுமார் 80-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அலையாத்திக் காடுகள் கடற்கரை உயிரியல் அமைப்பின் பாதுகாப்பு, கரையோர அரிப்பு தடுப்பு, மீன்வள வளம் மேம்பாடு மற்றும் காலநிலை மாற்றத் தணிப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதைக் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.


