கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பெற்ற மொத்த சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட அளவில் 2 -ம் இடத்தையும், மாநில அளவில் 13-ம் இடத்தையும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
சாதனை படைத்துள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர் ஸ்டாலின், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேவஇருதய ஆல்பர்ட் மற்றும் ஆசிரியர்கள் மெர்லின், ஜெசிந்தாராணி, ராஜேஸ்வரி, கிறிஸ்டிமா மேரி, ஆஷிகா, அன்னாள் ஸ்டெபி ஆகியோர்களை பள்ளியின் தாளாளர் பங்குத் தந்தை ஜோசப் இசிதோர் மற்றும் கீழராமசாமியாபுரம் ஊர் மக்கள் வெகுவாக பாராட்டினர்.


