தூத்துக்குடியில் ஐஎன்டியூசி தேசிய செயல் தலைவரும், மூத்த அரசியல் பிரமுகருமான கதிர்வேலை, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தூத்துக்குடி மாவட்டத்திற்குப் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் உள்ள ஐஎன்டியூசி தேசிய செயல் தலைவர் கதிர்வேலின் இல்லத்திற்கு அமைச்சர் நேற்று நேரில் சென்றார். அங்கு, நாட்டின் மிக மூத்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான கதிர்வேலைச் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அவரது நீண்ட கால அரசியல் மற்றும் பொதுவாழ்வின் அனுபவங்களைக் கேட்டறிந்த அமைச்சர், அவருக்குப் பொன்னாடை அணிவித்து மாரியாதை செய்ததுடன், அவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, கதிர்வேலின் மகனும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பெருமாள்சாமி உடனிருந்தார். அமைச்சரின் இந்த வருகையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள் பலரும் அங்கு வருகை தந்து அமைச்சரை முறைப்படி வரவேற்றனர்.


