பொருநை நதிக்கரை நாகரிகத்தின் பெருமையை (பொருநை ஆவணப்படம்) மூலமாக உலகறியச் செய்த நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களுக்கும் இயக்குனர்கள் இளங்கோ- சம்பத்குமார் அவர்களுக்கும்
சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்கத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், தாமிரபரணி நதியினை கழிவுநீர் கலக்காத நதியாக மாற்றுவது மற்றும் முற்றிலுமாக சுத்தப்படுத்துவது சம்பந்தமாக ஆக்கப்பூர்வ பங்களிப்பை தரவேண்டி, புதிதாக அமைந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு உறுதியான வேண்டுகோள் வைக்கக் கோரியும் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. தாமிரபரணி நதியினை மீட்பதற்காக முழு மனதுடன் தன்னாலான முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவினையும் கண்டிப்பாக செய்வேன் என்ற உறுதி மொழியினை சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அளித்தார்.

இந்த சந்திப்பில் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சைமன் ஜெயக்குமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் சிரில், அலெக்சாண்டர், s.k.கண்ணதாசன், ஜெனிஸ், தங்கவேல், புகழ், திருமதி பாஞ்சி, இறை, வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


