தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜூன் 11) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகர் கோட்டம், பீச் ரோடு விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட 110/22 கேவி பீச் ரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை நடைபெற உள்ளன. இதன் காரணமாக, நாளை (11.06.2026) வியாழக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம்.
கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள உப்பளப் பகுதிகள்.
லயன்ஸ் டவுன், வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, குரூஸ் பர்னாந்து காலனி (சுனோஸ் காலனி).
செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, ஜார்ஜ் ரோடு, பெரியகடை தெரு, தெற்கு மணல் தெரு.
பெரைரா தெரு, விக்டோரியா தெரு, கணேசபுரம், பாத்திமா நகர், இந்திரா நகர்.
புல்தோட்டம், டெலிபோன் காலனி, தாமஸ் நகர், பனிமய நகர், தாமோதர நகர்.
வண்ணாரத் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம், சந்தை ரோடு.
காந்தி நகர், மேல சண்முகபுரம் 2-வது தெரு, முனியசாமிபுரம், CGE காலனி.
லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், ராஜபாண்டி நகர்.
பொதுமக்கள் இந்த மின் தடையைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


