பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய கொடை விழாவை முன்னிட்டு, கயத்தாரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு வீர ஜோதி ஓட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாரில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தில் இருந்து இந்த ஜோதி ஓட்டம் தொடங்கியது. இதில் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த ஜோதி ஓட்டமானது கயத்தார் மணிமண்டபத்தில் தொடங்கி மதுரை மெயின் ரோடு, பசுவந்தனை, கடம்பூர் மற்றும் கீழமங்கலம் வழியாக சுமார் 20 கிலோமீட்டர் கடந்து பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் லாரிகள் அணிவகுத்துச் சென்றன. இதற்கான ஏற்பாடுகளை வீரசக்கதேவி ஆலய விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


