பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவாகவும், வீரசக்கதேவி ஆலய திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கட்டபொம்மன் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது திரு உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.மதன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


