செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் ஜெய்தூன்பீவி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஓ.பி. முஸ்தபா, மீரான் மைதீன், ரகுமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை முத்து கனி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டாக்டர் பொன்னி, ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் அழகேசன் , செய்யது முகம்மது நிஷா ஆகியோர் சிறப்புரையாற்றினார். பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை பியூலா நன்றி கூறினார்.


