செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உருவாக்கப்பட்ட பர்புலர் பிரண்ட் தின விழா நடந்தது.
திருவை டிவிஷன் தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்து, பாப்புலர் பிராண்ட் தின கொடியேற்றினார். அதன் பின் காஷ்மீரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பேச்சாளர் கல்வத் அகமது கபீர் சிறப்புரையாற்றினார். உமர் ஜமால், நவாஸ், முன்தஸிர், காலித், சித்திக், ஆசிர், ஜாவில், கரிம் உள்பட பலர் கலந்துகொண்டனர். நாட்டுக்காக உறுதிமொழி எடுக்கப்பட்டது.


