நாசரேத் பொறியியல் கல்லூரி தாளாளராக மாமல்லன் பதவி பொறுப்பேற்றார்.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரியில் புதிய தாளாளர் பதவியேற்பு விழா நடந்தது. குருவானவர் செல்வின் சார்லஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி புதிய தாளாளராக திருமண்டல செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாசரேத் பேரூராட்சி தலைவருமான மாமல்லன் பதவியேற்றார். புதிய தாளாளரை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஆக்னஸ் பிரேமாமேரி மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டீபன் சாலமோன், சுபாஷ், கரோலின், பிரவின்குமார், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள்விக்டர் மோகன்சிங், தில கர், லிவிங்ஸ்டன், ராஜேஷ், வினோதினி, நாசரேத் சேகர செயலாளர் ராஜசிங் சாலமோன், பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாசரேத் சேகர கமிட்டி உறுப்பினர்கள் புஷ்பராஜ், பர்னபாஸ் ஜெயக்குமார், நிர்மல்சிங், டேவின் சாலமோன், மாணிக்கராஜ் வில்சன், ராஜேஷ், ஞானசெல்வன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்று புதிய தாளாளருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிறைவாக குருவானவர் ஜாண்சன் நிறைவு ஜெபம் செய்தார்.


