தூத்துக்குடி சிவன் கோவிலில் நளை (ஞாயிற்றுக்கிழமை) மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், நாளை 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று இரவு முழுவதும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சிவராத்திரியின் முதல் கால பூஜை இரவு 09.00 மணிக்கு அபிஷேகத்துடன் தொடங்கி, 10.00 மணிக்கு தீபாராதனையுடன் நிறைவடையும். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கால பூஜை இரவு 11.00 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரையிலும், மூன்றாம் கால பூஜை அதிகாலை 01.00 மணி முதல் 02.00 மணி வரையிலும் நடைபெறும்.
இறுதி நிகழ்வாக நான்காம் கால பூஜை அதிகாலை 03.00 மணிக்குத் தொடங்கி 05.00 மணி வரை நடைபெறும். சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து, மறுநாள் அதிகாலை 05.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், 06.00 மணிக்கு திருவனந்தல் வழிபாடும், 06.30 மணிக்கு காலசந்தி பூஜையும் நடைபெற உள்ளன. பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


