தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்குக் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, தூத்துக்குடி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சி. பிரியங்கா முன்னிலையில் மாத்திரை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் ஆட்சியர் புவனேஸ்ராம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


