செய்துங்கநல்லூரில் முருக பக்தர்களுக்கு பாதுகாப்பு ஒளிரும் பட்டை ஒட்டும் நிகழ்வு நடந்தது.
இந்நிலையில் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் நோக்கி பல லட்சம் பக்தர்கள் மாலையணிந்தும், அழகு குத்தியும்,காவடி தூக்கியும் தங்களது நேர்த்தி கடனை செழுத்த திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் பாத யாத்திரையாக செல்கிறார்கள்.
இதில் சில பக்தர்கள் இரவு நேரங்களில் விபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். இதனை தடுக்கும் விதமாக இரவு நேரத்தில் இருள் நிறைந்த பகுதியில் நடந்து செல்லும் பக்தர்களை, வாகன ஒட்டிகள் எளிதில் கண்டறியும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பை கருதி, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 950 பக்தர்களுக்கு இரவு நேரத்தில் வெளிச்சம் பட்டால் மின்னும் பாதுகாப்பு ஒளிரும் பட்டை பக்தர்களின் பைகள் மற்றும் வலது புற தோள் பகுதியில் ஒட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் தலைமை காவலர் வளர்மதி ஒளிரும் பட்டையை ஒட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வசவப்பபுரம் சமுக ஆர்வலர் கணேசன், அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர். சுமார் 1000 பேருக்கு இந்த ஒளிரும் பட்டை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சமுக ஆர்வலர் கணேசன் செய்திருந்தார்.


