தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இ.சேவை மூலம் ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிட ஏதுவாக சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதுஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான ஆன்லைன் பஸ் பாஸ் புதுப்பித்தலை மாற்றுத்திறனாளிகள் அவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து இலவச பஸ் பாஸ் பயன்பெற்றுக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இத்திட்டம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஆன்லைன் பஸ் பாஸ் பெற்றிட ஏதுவாக இவ்வலுவலகத்தில் 31.01.2026 வரை அனைத்து அலுவலக நாட்களிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு அன்றைய தினமே இலவச பயண அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
பழைய பஸ்பாஸ் புதுப்பித்தல் மற்றும் புதிய இலவச பயண அட்டைகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 31.01.2026 வரையுள்ள அரசு விடுமுறைதினங்கள் தவிர்த்து ஏனைய பணிநாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
எனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வைத்து நடைபெறும் இ-சேவை மூலம் ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


