தூத்துக்குடி, தாளமுத்து நகர் இலங்கை தமிழர் முகாமில் நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சார்பில் புத்தாண்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் இலங்கை தமிழர் முகாமில் எழுபது குடும்பத்தார் வாழ்கின்றனர். இம்முகாமில் வாழக்கூடிய வயதுமுதிர்ந்த முப்பது முதியோர் குடும்பங்களுக்கு நெய்தல் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்து, ஆசியுரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பள்ளியின் முன்னாள் மாணவர் நிஷாந்த், நெய்தல் எழுத்தாளர்கள் இயக்கத்தின் ஜிபின் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் இயக்கத்தின் இணைச் செயலரும், நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான எழுத்தாளர் தமிழ்ச் செம்மல் நெய்தல் யூ. அண்டோ சிறப்புரையாற்றினார்.மக்கள் சார்பாக ஸ்டெல்லா நன்றியுரை கூறினார்.


