தூத்துக்குடியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் பழமையான சிவன் கோவிலில் அமைந்துள்ளது. இங்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது 3.30 மணிக்கு பள்ளி அறை பூஜை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4.30 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் ஆகி 5 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணை நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன் சண்முகம் ஆகியோர் நடத்தினர்.

வைகுண்டபதி பெருமாள்: சிவன்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமோத ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு கோ பூஜை அதைத் தொடர்ந்து அலங்கார தீபாரணை நடந்தது பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பிரதான பட்டர் வைகுண்ட ராமன் செய்திருந்தார்
தெப்பக்குளம் மாரியம்மன்: தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை உடன் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பூஜைகளை பிரதான பட்டர்கள் சிவா மற்றும் குரு ஆகியோர் செய்திருந்தனர்.


