தூத்துக்குடியில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்க தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம் மாவட்ட தலைவர் அபிராமிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் விஜயகுமாா், துணை தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் ஜெபசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அகில இந்திய தலைவா் காளிதாசன் விளக்கவுரையாற்றினாா். மாநில மகளிா் அணி அமைப்பாளா் கலா வரவேற்புரையாற்றினாா்.
கூட்டத்தில் ஆய்வக நுட்பனர்களின் உரிமையை காக்க 2026 பிப்ரவரி 15 அன்று மாநிலம் தழுவிய உண்ணா விரதப்போராட்டம் சென்னையில் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், மாநிலத் தலைவர் தியாகராஜன் மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார் மாநில பொருளாளர் ஆறுமுகம் அகில இந்திய துணைத்தலைவர் துரைசாமி மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சம்பத்குமாா் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சிவக்குமார் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக, மாநில துணை செயலாளர்களாக பாலாஜி கோபி சதீஷ் ஜெதீஸ்வரன். சுந்தர் சிவகுமார் ஆகியோர் மாநில நிர்வாக குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனா்.
என்ஏபிஎல்சிஇஓ வாக இருந்த வெங்கடேஸ்வரன் மாநிலத்தில் உள்ள சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை காப்பாற்றும் வகையில் எண்ணற்ற உதவிகள் புரிந்து என்ஏபிசிக்கு சிஇஓ-வாக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளதற்கும். சிஎம்சி இக்யூஏஎஸ் கோஆா்டினேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் பமிலா கிறிஸ்துதாஸ்க்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் நமது சங்கம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில குழுவிற்கு வருகை தந்த மாநில நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்ட செயலாளர் மைக்கேல் பிரதீப் நன்றியுரையாற்றினாா்.


