தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் சிறப்பாக பணியாற்றிய 10 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினருக்கு கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் வீரதீர சான்றிதழ் வழங்கினார்.
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழுமத்தில் ஐந்து காவல் நிலையங்களில் பணியாற்றும் 10 காவலர்கள் மற்றும் 02 ஊர்க்காவல் படையினருக்கு தமிழ்நாடு காவல்துறை கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார், இராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால், முன்னிலையில் கடலில் சிக்கிய மனித உயிர்களை காத்ததற்கான வீரதீர சான்றிதழ் வழங்கினார்.


