தூத்துக்குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா ஈரோடு மாவட்டத்திலிருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட உள்விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளிலுள்ள 417 வார்டுகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 618 தொகுப்புகள் (Sports Kit) வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத் தலைமை தாங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி விழா பேரூரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.ஆ.ஜெயரத்தினராஜன், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா அரசு அதிகாரிகள், பயிற்றுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.


