கொடைக்கானலில் நடைபெற்ற ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
கோஜுரியோ வேர்ல்ட் கராத்தே டூ ஷோபுகாய் இந்தியாவின் சார்பில் 6வது ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கொடைக்கானலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இதில் கோஜுரியோ வேர்ல்ட் கராத்தே டூ ஷோபுகாய் இந்தியா தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமை நடுவராக செயல்பட்டார்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி இரட்சண்யபுரம் பகுதியை சார்ந்த சிறைத்துறை காவலர் சுந்தர் அவர்களது மகனும், விக்டோரியா CBSE பள்ளியை சேர்ந்த 10 வயது மாணவன் மணிஷ் மித்ரன் மற்றும் லோகேஷ், ரோஹித், ஜோகித், அகில், நளின் ஆகியோர் கட்டா மற்றும் சண்டை பிரிவில் முதல் பரிசும், 9 பேர் இரண்டாம் பரிசும் 7 பேர் மூன்றாம் பரிசும் வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடர் வெற்றியை பெற்றுவரும் தூத்துக்குடி மாணவர்களை கராத்தே பயிற்சியாளர்கள் பிரதீப், ஆகாஷ், நிஷாந்த், ரோஹித், மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.


