தென்சிதம்பரம் என்றழைக்கப்படும் செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் 10 நாள் மார்கழி திருவிழா நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 14 ந்தேதி முதல் தினந்தோறும் காலை மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. தினமும் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் தந்தார். முதல் நாள் ரிஷப வாகத்திலும், இரண்டாம் நாள் ரிஷப வாகனத்திலும், மூன்றாம் நாள் சூரிய வாகனத்திலும், நான்காம் நாள் பூதவாகத்திலும், 5 ம் நாள் ரிஷப வாகனத்திலும், 6 ம் நாள் யானை வாகனத்திலும், 7 ஆம் நாள் கைலாய வாகனத்திலும்,8 ம் நாள் வெட்டும் குதிரை வாகனத்திலும் சுவாமி உள்பிரகார வீதி உலா வந்தார்.
எட்டாம் நாள் மாலை 5 மணிக்கு சுவாமி பச்சை சாத்தி செய்துங்கநல்லூரில் மிக முக்கிய வீதிகள் வழியாக சுவாமி உலா வந்தார். 9 வது நாள் சுவாமி தேரில் வீதி உலா வந்தார். 10 வது நாள் அதிகாலை 3 மணிக்கு யாகசாலை பூஜைகள் , ஸ்ரீ ருத்ர ஹோமம் அபிசேகம் திரு நடன தீபாராதனை நடைபெற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. காலை 8.30க்கு ஸ்ரீகாரைக்கால் அம்மையார் மற்றும் மாணிக்க வாசகருக்கு நடராஜ பெருமான் திருநடன காட்சியை அளித்ல் வைபம் நடநதது. அதன் பின் சிவகாமி அம்மையார், ஸ்ரீநடராஜபெருமான் திருவீதி உலா எழுந்தருளல், மீண்டும் ஆலயம் சேரும் வைபவம் நடந்தது. மாலை 5 மணிக்கு சிவபூத கன வாத்தியம் இசை முழங்க சுவாமி உள்விதி உலா எழுந்தருளல் நடந்தது.
11 ம் நாளான இன்று(24 ந்தேதி) ஸ்ரீநடராஜர் பஞ்ச மூர்த்திகள் அபிசேகம் தீபாரதனை கருங்குளம் தாமிரபரணி புஷ்கரணியில் சுவாமி புனித நீராடல் நடைபெறும். அதை பின் மாலை 5 மணிக்கு கொடி பட்டம் இறக்கப்படும். பூஜை ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் பால சுப்பிரமணியன் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வர் ஆன்மீக பேரவை, செய்துங்கநல்லூர் விகோவில்பத்து ஊர் பொதுமக்கள் செய்திருக்கிறார்கள்.


