செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ஆராக்கிய லாசர் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை அமலா முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் மாணவர்கள் வந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் செய்திருந்தனர்.


