கருங்குளம் வெங்கிடாசலபதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
கருங்குளத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன்பின் திருப்பள்ளி எழுச்சி நடந்தது. அதன் பின் உற்சவர் ஸ்ரீனிவாசர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சன்னதி வந்தடைந்தார். அதன் பின் சயன கோலத்தில் பகவான் அருள்பாலித்தார். பக்தர்கள் காலை முதல் பெருமானை தரிசனம் செய்தனர். அதன் பின் 1 மணிக்கு திருப்பள்ளி எழுர்ச்சி நடந்தது. அதன் பின் திருமஞ்சனம் நடந்தது. அதன் பின் அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. மாலை 5மணிக்கு சொர்க்கவாசல் திறந்தது. ஸ்ரீனிவாசர் தம்பதி சகிதமாக சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். அதன் பின் அவருக்கு தீபாரதனை காட்டப்பட்டது. பின் சப்பரத்தில் சுவாமி கிரி வலம் வந்தார். அதன் பின் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். அதன் பின் சுவாமி மூலக்கோயிலுக்குள் பகவான் சேர்க்கையடைந்தார். இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் ராஜேஷ் பட்டர், சுந்தர்ராஜ பட்டர் செய்திருந்தனர்.


