செய்துங்கநல்லூர் 1 வது வார்டு ஸ்ரீவிஸ்வ விநாயகர் கோயிலில் வைத்து மூன்றாம் ஆண்டு ஐயப்ப பூஜை நடந்தது.
இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு கன்னி பூஜை மற்றும் ஸ்ரீஐயன் பூஜை நடைபெற்றது. குருசாமி மாரியப்ப சுவாமிகள், கணேஷ் சுவாமிகள் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


