தூத்துக்குடியில் காந்தியடிகளின் பிறந்த முன்னிட்டு அவரது சிலைக்கு சார்பில் அமைச்சர்கள் பி.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி வ.உ.சி சாலை கிழக்கு மண்டலம் (பழைய மாநகராட்சி) அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ,மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதசார்பற்ற ஜனதா தளம்
தூத்துக்குடியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாள், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளிள் பக்கிள்புரம் காமராஜ் நினைவு பள்ளியில் அலங்கரிக்கப்பட்ட தேசியத் தலைவர்களின் படங்களுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில துணை தலைவர் வக்கீல் எம். சொக்கலிங்கம் மாலை அணிவித்தார்.
மாவட்ட தலைவர் ராஜேந்திர பூபதி , மாவட்ட செயலாளர் ஏ.கே.பாபு , மாநகர தலைவர் எம். கோமதிநாயகம், துணை தலைவர் ஆர்.செல்வராஜ் மற்றும் எம். ராஜேந்திரன், ஆர் சாத்தாவு, திரு.சுயம்புலிங்கம், கி.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து நகரத்திலுள்ள காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
காங்கிரஸ்
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில். மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, ராஜன் சிறுபான்மை பிரிவு மைதீன், SC பிரிவு பிரபாகரன், ஊடகப்பிரிவு ஜான் சாமுவேல், அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், வழக்கறிஞர் பிரிவு பர்ன பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கழகம்
தூத்துக்குடியில் மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள காந்தி மற்றும் காமராஜர் உருவ சிலைகளுக்கு மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் மாவட்டச் செயலாளர் டேனியல் ராஜ் மற்றும் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட துணைச் செயலாளர்கள் அருள்ராஜ் ,சூசை முத்து தலைமை பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் மாநகரச் செயலாளர் முத்து செல்வம், ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


