குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி இடையே 02.10.2025 மற்றும் 03.10.2025 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் சேவைகள்.
குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி இடையே முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரயில்கள் 02.10.2025 மற்றும் 03.10.2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
1. ரயில் எண் 06106 திருச்செந்தூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் 02.10.2025 மற்றும் 03.10.2025 ஆகிய தேதிகளில் இரவு 9.00 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.
2. திருநெல்வேலி – திருச்செந்தூர் சிறப்பு ரயில் எண் 06105, திருநெல்வேலியில் இருந்து 02.10.2025 மற்றும் 03.10.2025 ஆகிய தேதிகளில் இரவு 11.00 மணிக்குப் புறப்பட்டு 12.30 மணிக்கு திருச்செந்தூரை வந்தடையும்.
சிறப்பு ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூரில் நிற்கும். ரயில் எண் 06106 பாளையங்கோட்டையிலும் நிற்கும். சிறப்பு ரயில் 10 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


