தூத்துக்குடி காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
காதி கிராப்ட் அங்காடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று 2.10.25 தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தனர். மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா துணை மேயர் செ.ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசுகையில், “உத்தமர் காந்தியடிகளின் 157வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் 02.10.2025 முதல் சிறப்பு கதர் விற்பனை காலம் முடியும் வரை தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் செயல்படும்.
மேலும், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், பட்டு துண்டுகள், கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், இலவம் பஞ்சினால் ஆன மெத்தை, தலையணைகள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய,மாநில அரசுகளினால் கதர் ரகங்களுக்கு 30%-ம், உல்லன் ரகங்களுக்கு 20%ம் ஆண்டு முழுவதும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
அரசு துறைகளில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு அவர்களது மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலம் வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.
2025-2026ம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு கதர் விற்பனை இக்குறியீட்டினை குறியீடாக ரூ.165.10 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட கதர் துணிகளை பெருமளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


