செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளியில் மாணவர்களுக்கிடையே காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
காசநோய் மாவட்ட துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் டாக்டர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தனர். மாவட்ட நலக் கல்வியாளர் தங்கவேல், பள்ளியின் தளாளர் ரஹ்மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜெய்தூண் பீவி வரவேற்றார். இந் நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு குறித்து வினாடி வினா போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, டி.ஆர்.டி.பி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக செய்யப்பட்டிருந்தது.


