நாசரேத்தில் வாலிபர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரம் மேல தெருவைச் சேர்ந்தவர் அருள் சுந்தர். பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ராணி சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியரின் மகன் ஜான் பிரபாகர் (27). பிகாம் முடித்துள்ளார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், தந்தையும் தாயும் வேலைக்கு சென்ற பின்பு வீட்டில் தனியாக இருந்த ஜான் பிரபாகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீடு திரும்பிய தாய் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நாசரேத் காவல் நிலைய போலீசார் சம்பவத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


