திருநெல்வேலி நகர் கூலக் கடை வீதியில் உள்ள திருவள்ளுவர் பேரவையில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு கவிஞர் சிவ. இராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரின் நேர்முக உதவியாளர் லெ. மாணிக்கவாசகம்
முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்கத்தின் மாநில தலைவர்
கவிஞர் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.
பேரவையின் அமைப்பாளர் ,தூய தமிழ்ப் பற்றாளர் ,கவிஞர்
ந .ஜெயபாலன் வரவேற்புரை ஆற்றினார்.
தொடர்ந்து, பேரவை ஆர்வலர்கள் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி,
கவிஞர் ஜெ .ஸ்ரீராம், செல்வன் சதீஷ் ,கவிஞர் புன்னைச்செழியன், மருத்துவர் பரமசிவன், குழந்தை பிரணவ் குகன், போன்றோருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்பட்டது.
வாங்க சிரிக்கவைக்கலாம் என்ற கலகலப்பான நிகழ்வுடன் நிகழ்ச்சி தொடங்கியது .
கவிஞர் ந .ஜெயபாலன் ,கவிஞரும், தூத்துக்குடி வாங்கி ஊழியருமான சாந்தி பிரபு எழுதிய , “விடையில்லா வினாக்கள்” எனும்
சிறுகதை தொகுப்பு நூலை அறிமுகம் செய்து,திறனாய்வு செய்தார்.
அவர், தனது உரையில் இந்நூலின் தலைப்புக்கு எந்த சிறுகதையும் இந்நூலில் சேர்க்கப்படவில்லை . ஆனால்…ஒவ்வொரு கதையிலும் இந்த சமூகத்தை நோக்கி கேட்கப்படவேண்டிய கேள்விகளின் குறியீடு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
சிறுகதை என்பது ஒரு புள்ளியிலிருந்து தொடங்க வேண்டும். மெதுவாக அது நகரும்போது ஒரு செய்தியை சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பை விதைத்து , தான் தொடவேண்டிய இடத்தை தொட்டதும் வாசகனின் மனதில் சிறு கோபத்தை…ஆவேசத்தை..மென் சிரிப்பை… தென்றல் தீண்டிச் செல்லும் சுகத்தை… இதில் ஏதேனும் ஒன்றைத் தரவேண்டும்,
சாந்தி பிரபுவின் சிறுகதைகள் அதை செய்கிறது. என்று குறிப்பிட்டார் .
தொடர்ந்து பாராட்டரங்கம் தொடங்கியது. .
திருநெல்வேலி சாஃப்டார் மேல் நிலைப் பள்ளி மாணவன் முத்து ஸ்ரீ
ராஜேந்திரன் மாவட்ட அளவில் +2 தேர்வில் முதல் இடத்தையும் ,மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்ததை பாராட்டி அவருக்கு “சாதனையாளர் “விருது வழங்கப்பட்டது.
மேனாள் நெல்லை மாநகராட்சி பேட்டை மருத்துவமனை சித்த மருத்துவர் மு .பரமசிவம் அவர்கள் மாணவர் முத்து ஸ்ரீ ராஜேந்திரனுக்கு ரூ .ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.
பிரபல TATA நிறுவனம் நடத்திய சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்று, நம்முடைய குடியரசுத் தலைவர் கையால் விருதுப் பெற்ற மாணவர் த.ராகுல் தமிழ்நாடு முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்தும் பெற்றுள்ளார். அவரைப் பாராட்டி “சாதனையாளர் “விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அடுத்து , நெல்லையில் மண்மணம் பேசும் பழம்பெரும் நூல்களை மறு உருவாக்கம் செய்து பதிப்பித்து வரும் நெல்லை மாநகராட்சியின் மேனாள் மண்டலத் அ.வெங்கிடசுப்ரமணியன் அவர்களின் சேவையைபாராட்டி “பதிப்புச் செம்மல்” என்ற விருது
திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை சார்பில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக சித்த மருத்துவமாமணி . மு.பரமசிவன், தொல்லியல் ஆய்வாளரும்,எழுத்தாளருமான முத்தாலங் குறிச்சி காமராசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கவிஞர் ,முனைவர் கோ. கணபதிசுப்ரமணியன் நடுவராக இருந்து , “வள்ளுவர் அழுத்தமாக வலியுறுத்துவது “அறமே” என்ற தலைப்பில் கவிஞர் ம.சக்திவேலாயுதம் அவர்களும், “பொருளே” என்ற தலைப்பில் இளம்முனைவர் திருமதி .சொர்ணவல்லி அவர்களும். “இன்பமே” என்ற தலைப்பில் பாப்பாக்குடி செல்வமணி அவர்களும் வாதங்களை எடுத்து வைத்தனர். அறம் தான் அனைத்துக்கும் ஆதாரம் என்ற கருத்தைச் சொல்லி சுழலும் சொல்லரங்கத்தை நிறைவு செய்தார் நடுவர்.
கவிஞர் செ.ச .பிரபு நன்றி உரைத்தார்
நிகழ்வின் இசைப் பாடகர் சம்சுதீன் (எ)கனி தன் பாடல்களால் கூட்டத்தை கலகலப்பாகி மகிழ்வித்தார்.


