தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் கடந்த 21.06.2025 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் மகன் கார்த்திக்ராஜா (24), திருநெல்வேலி ராஜவல்லிபுரம் பகுதியில் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ் (28)
மற்றும் கடந்த 24.06.2025 அன்று தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியை சேர்ந்தவர்களான மாடசாமி மகன் மாரிலிங்கம் (24), பாலா மகன் ராஜ்குமார் (29), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த வசமுத்து மகன் அருஞ்சுணைமுத்து (எ) அருண் (22) ஆகிய 5பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் கே. இளம்பகவத் இன்று (24.07.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் 5 பேரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 81பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


