இந்தியாவிலேயே முதல் முதலில் சைட் மியூசியம் அமைந்த இடம் ஆதிச்சநல்லூர். எனவே இவ்விடம் பெருமையாக போற்றப்படுகிறது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டலத்தில் சார்பில் இவ்விடம் பராமரிக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கொண்டாடப்பட்டது. அதில் ஆதிச்சநல்லூரும் ஒன்றாகும். இவ்விடத்தில் சர்வ தேச யோகா தினம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பாரத பிரதமர் மோடி பங்கு வகித்த சர்வதேச யோக நிகழ்ச்சி திரையிட்டு காட்டப்பட்டது. அதன் பின் யோகா நிகழ்ச்சி துவங்கியது. ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவ மனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்தவ அலுவலர் மருத்துவர் இந்துமதி, மருத்துவர் செந்தாமரை ஆகியோர் வழிகாட்ட நோய் தீர்வியல் உதவியாளர்கள் சரவணன், ராஜேஸ்வரி ஆகியோர் பயிற்சியை செய்ய, அதை தொடர்ந்து மாணவ மாணவிகள் மற்றும் வந்திருந்தவர்கள் யோகா உடற்பயிற்சி செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக என்.எஸ்.எஸ் மாணவர்கள், ஜான்ஸ் கல்லூரி மாணவர்கள், ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு யோகா பயிற்சியை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் முத்துக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அர்ஜீனா விருது பெற்ற மணத்தி கணேசன், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, அண்ணா விருது பெற்ற வேல் முருகன், நல்லாசிரியர் விருது பெற்ற கே.ஜி.எஸ் பள்ளி தலைமை ஆசிரியை ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் துறையை சேர்ந்த உமேஷ், , ராஜா, நடராஜன், கே.ஜி.எஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், ஜோஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ரகுமத்துல்லா, முதல்வர் ஜெய்துன்பீவி, இந்து கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் டாக்டர் இலக்குவன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் இசக்கி, ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி ஈஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். சைட் பொறுப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.


