கீழ வல்லநாடு இன்பென்ட் ஜீஸஸ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் கலிவரதன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர்கள் ஆறுமுகம் மற்றும் ஜினி முன்னிலை வகித்தார்கள். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வைகுண்ட ரமணி மற்றும் கல்லூரி செயலர் மற்றும் முதல்வர் ஆல்வின் தலைமையுரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர்கள் செல்வகுமார், முருகபொற்ச்செல்வி, ஜன்னத் செரிப் மாணவ மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனதினை வலுப்படுத்த யோகா மற்றும் மூச்சு பயிற்சிகள் அளித்தனர், யோகா தொடர்பான வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் கணினி அறிவியல் துறை பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்,
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அஸ்வின், ஈஸ்வரன், கோபி,அபிதா,ஜாஸ்பின், ஆஷிகா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் கலிவரதன், பேராசிரியர் ஜெகதீஸ், சேர்க்கை அலுவலர் ஆல்பர்ட் லெனின், பேராசிரியர் மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.


