தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் முத்து மகன் அஜய் (22). இவர் இன்று காலை தனது வீட்டில் உள்ள பல்ப்பை மாற்றுவதற்க்காக முயன்றபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க்பபட்டது. இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


