தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது உருவ படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி, “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மண்ணையும் மக்களையும் காப்பதற்காக தன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


