சாத்தான்குளம் பகுதியில் இடி மின்னலுடன் திடீர் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் ஓட்டு வீடு சேதம் அடைந்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடும் வெப்பம் தாக்கம் இருந்த வந்தபோதிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வரை வெயில் தாக்கம் இருந்து வந்த நிலையில் 12 மணி அளவில் இடி மின்னலுடன் திடீரென மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் சாத்தான்குளம் செக்கடி தெருவில் குமார் என்பவரது வீட்டில் ஓடுகள் சேதம் ஆகி அதில் தீ உண்டாகி புகை வந்து கொண்டிருந்தது.
உடன் அருகில் இருந்தவர்கள் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மின்னல் தாக்கியதில் தீயை அணைத்தனர். மின்னல் தாக்கியதில் வீட்டின் ஓடுகளும், அதில் இருந்த பழைய பொருட்களும் எரிந்து சேதமானது. வீட்டில் ஆள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
உடன் தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீசார் பார்வையிட்டனர். மழை பெய்ததில் இப்ப பகுதியில் குறைந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது போல், சாத்தான்குளம், புதுக்குளம், ஞானியார்குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது.


