கல்லூரி கனவுகள்” திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
முதலமைச்சரின் “கல்லூரி கனவுகள்” திட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இன்று மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்தனர்.
நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. அகிலன் மற்றும் தூத்துக்குடி துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்கள். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியில் உயர்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். அருங்காட்சியகம், மீன் பண்ணை மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனத்தில் உள்ள பல்வேறு வசதிகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
உதவிப் பேராசிரியர்கள் வெ. கோமதி மற்றும் ம.கீதா, இக்கல்லூரியின் மூலம் வழங்கப்படும் பட்ட படிப்புகள், சேர்க்கை வழிமுறைகள், இடஒதுக்கீடுகள், கல்விக் கட்டணம் மற்றும் மீன்வள அறிவியல் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கினர். இந்நிகழ்ச்சி உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர், கோ. அருள் ஒளி ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் பூ.மணிகண்டன் செய்திருந்தார்.


