நாசரேத்தில் மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உயர் மின்னழுத்த காரணமாக மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அலுவலகம் மூலம் அனைத்து செல்போனுக்கும குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. ஆனால் காலை முதல் இரவு 8 மணி வரை மின்சாரம் வரவில்லை. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதே நிலை அடிக்கடி ஏற்படுகிறது.வரும் காலத்தில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


