தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள 2 அங்கன்வாடி மையக் கட்டடங்களை அமைச்சர் பி.கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய அங்கான்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை ஒட்டி மேட்டுப்பட்டி சுந்தரவேல்புரம் ஆகிய இரு இடங்களில் 47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் (பொறுப்பு) காயத்ரி வரவேற்புரையாற்றினார்.
புதிய அங்கன்வாடி மையத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பேசுகையில் “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எல்லோருடைய நலனிலும் அக்கறைகொண்டு செயல்படுகிறாா். எல் & டி நிறுவனம் பல தொண்டு காாியங்களை செய்து வருகிறது. அதனடிப்படையில் அங்கன்வாடி மையம் கட்டித்தரவேண்டும் என்று கோாிக்கை வைத்தோம் அதனை ஏற்றுக்கொண்டு இரண்டு அங்கன்வாடி மையங்கள் நான்கே மாதத்தில் நல்ல முறையில் கட்டுக்கொடுத்துள்ளனா். ஏழை எளிய மக்கள் சுகாதாரமான முறையில் வாழ வேண்டும் நல்ல கல்வி கற்க வேண்டும் என்று பேசினாா்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் முரளிதரண், துணை மேயர் ஜெனிட்டா, பொறியாளர் தமிழ்செல்வன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனிர்அகமது, உதவி ஆணையர் சுரேஷ் குமார், கவுன்சிலர்கள் பவானி, நாகேஸ்வரி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ், மார்சலின், ஜான்சிராணி, எல் & டி நிறுவனத் தலைவர் மீனா சுப்ரமணியம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.


