சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் 54வது தேசிய பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.
துாத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் உள்ள டிசிடபிள்யூ நிறுவனத்தில் 54வது தேசிய பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. துவக்க விழாவில் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் எஸ்.கேசவன், தலைமை தாங்கி பாதுகாப்பு கொடியை ஏற்றி வைத்தார். நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
நிறைவு விழாவில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் பி.தமிழ்செல்வன், சிறப்பு விருந்தினராக கலந்து பிரதம உரையாற்றினார். டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்) கோ. ஸ்ரீனிவாசன், உதவி தலைவர் (உற்பத்தி) எஸ். சுரேஷ் ஆகியோர் தலைமை தலைமை வகித்தனர். பாதுகாப்பு துறையின் தலைவர் சி.ஆல்விஸ் கிப்ட் 2024ம் ஆண்டிற்கான பாதுகாப்பு ஆண்டறிக்கையை சமர்பித்தார்.

இவ்விழாவில் Mutual Aid Company-யான ஸ்பிக் நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர்கள், பொதுமேலாளர்கள், அனைத்து துறை தலைவர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக பல்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிசிடபிள்யூ நிறுவனத்தின் பாதுகாப்பு துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.


