எட்டையாபுரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கண்டன உரையாற்றினார்.
இந்தித் திணிப்பு – நிதிப்பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எட்டையாபுரத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமை வகித்தார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், பிரதீப் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் இறுதியில் மாற்றுக்கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் ஊடகவியலாளர் மில்டன் கழக இளம்பேச்சாளர் சக்திவேல்முருகன் விளாத்திகுளம் தொகுதி பார்வையாளர், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


