தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் முக்கிய தொழிலாளன உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உப்பு உற்பத்தி துவங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக ஏற்கனவே உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்று பெய்து வரும் மழை காரணமாக உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் அவதி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் பொதுத் தேர்வு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வில்லை. இதனால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனர்.


