ஏரல் சந்திரா தியேட்டர் பின்புறம் அமைந்துள்ளவிஸ்வகர்மா கலை வளாகத்தில் தமிழக திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ,
ஏழிசை மன்னர் தியாகராஜபாகவதர் 115 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
ஏரல் விஸ்வகர்மா பேரவை சார்பில் நடைபெற்ற
இந்த நிகழ்ச்சியில் ஏரல் வடபத்திரகாளியம்மன் கோயில் பொருளாரும்
நகைமதிப்பீட்டாளருமான மகாராஜன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோயம்புத்தூர் சூலூர்
நாம் தமிழர் கட்சியின் வீரக்கலை பாசறையின் செயலாளர் சண்முகவேல்
பாகவதர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
நிகழ்ச்சியில் திருச்சி மத்திய பேருந்து அருகேதியாகராஜபாகவதரின் வெண்கல சிலையோடு கூடிய மணிமண்டபத்தை
கடந்த 27.02.2024 செவ்வாய்க்கிழமை திறப்பு விழா நடத்தி ,
அதனை அரசு விழாவாக தொடர ஆணையிட்ட
தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
யோகா ஆர்வலர் தென்கரைமகாராஜன் இனிப்பு வழங்கினார்.
சமூக ஆர்வலர்கள் ஐயப்பன், கணேசன் , ஏரல்ராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடு செய்த கவிஞர் ஏரல் ராஜன் நிகழ்ச்சி முடிவில் நன்றிக் கூறினார்.


