சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு பொருட்கள் 5,300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஜனவரி 23 ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரு கேயுள்ள சிவகளை தொல்லியல் களமானது இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த பகுதி யாக உள்ளது. சிவகளையில் 3 கட்ட அகழாய்வுகள் நடந்துள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான அரியவகை பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வின் போது ஆராய்ச்சியா ளர்கள் அன்றைய மக்கள் இரும்பை பயன்படுத்தியதற்கான ஆதாரங்க ளாக இரும்பு பொருட்களை கண்டுபி டித்து எடுத்தனர். மேலும் சிவகளை ஆசிரியர் மாணிக்கமும் தனது கள ஆய்வின் போது இரும்பு மற்றும் இரும்பு கழிவுகள் கண்டெடுத்து அதனை ஸ்ரீவை. குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் கொண்டு வைத்துள்ளார்.
நானும் இது குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தேன்.அந்த வழக்கு எண்21577/2019 என்பதாகும். எனது வழக்கினை வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி நடத்தினார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதியரசர்கள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் சிவகளையில் ஆய்வு செய்ய வேண்டும் என மாநில தொல்லியல் துறையினருக்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் தொல்லியல் துறை இயக்குனராக இருந்த உதய சந்திரன் அவர்கள் சிவகளை மீது மிகவும் ஆர்வம் கொண்டு இருந்தார். இதனால் இந்த பணி 31.01.2000 அன்று துவங்கியது.
இதை துணை இயக்குனர் சிவனாந்தம் துவக்கி வைத்தார். அகழாய்வு இயக்குனர் பிரபாகரன், தங்கத்துரை ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டனர். அப்போதைய அமைச்சர் ம.பாண்டியராஜன் இதற்கு மிகவும் உதவியாக இருந்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் தி-.மு.க அரசு மு.க.ஸ்£டலின் முதலமைச்சராக பொறுப்போற்ற பிறகு இந்த பணி மீண்டும் பிரமாதம் அடைந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு தொல்லியல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சிவகளை அகழாய்வு மேலும் முடிக்கி விடப்பட்டது.
இங்கு மூன்று முறையில் அகழாய்வு நடந்தது. இதில் முதல் கட்ட அகழாய்வு நடந்த போது கிடைத்த நெல் மணிகளை
முதல்கட்ட ஆய்வில் சிவகளையில் கண்டெடுக்கப் பட்டுள்ள நெல்மணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இதற்£க அமெரிக்கா பீட்டா ஆய்வாகத்துக்கு இதன் மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது சிவகளை வயது 3,200 ஆண் டுகள் பழமையானது என தெரிய வந்தது. அதேபோல் இந்த அகழாய் வில் கண்டெடுக்கப்பட்டுள்ள மண் கிண்ணங்களை ஆய்வு செய்ததில் அது பால் பொருட்களை சேகரித்து வைத்ததற்கான தடயங்கள் கிடைத் தது. இதையடுத்து சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை இன்னும் பலகட்ட சோதனை செய் யப்பட்டு வருவதாகவும், அதன் முடி வுகளை அகழாய்வு ஆராய்ச்சியாளர் கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
2004டல் ஆய்வு செய்த போது, அதில் கிடைத்த பொருள்களை ஹாட்சியா என்ற ஆராய்ச்சிக் குழுவவினர் டேட்டிங் செய்துள்ளார்கள். அந்த டேட்டிங்படி 3800 முல் 6000 வருடங்களுக்கு முற்பட்டதுஆதிச்சநல்லூர் என முடிவானது. இந்த தகவலை நான் எழுதிய ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 என்ற நூலில் பக்கம் 118 ல் தெரிவித்து உள்ளேன். இந்த தகவல் ஆதிச்சநல்லூரை 2004 ல் ஆய்வு செய்த டாக்டர் சத்திய மூர்த்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ளது.
ஆகவே அதே தாமிரபரணி கரையில் உள்ள சிவகளையில் அக ழாய்வில் கண்டுபிடிக்கப் பட்ட இரும்பு பொருட்க ளின் தொன்மை குறித்து முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தரன்.
நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள ஒரு அறிக் கையில், தமிழகத்தில் அண்மைக்காலங்களில் ஆதிச்சநல்லூர், சிவ களை, மயிலாடும்பாறை, கீழ்நமண்டி, மாங்காடு மற்றும் தெலுங்கனூர் ஆகிய தொல்லியல் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த சான்று களும், அறிவியல் அடிப்படையிலான காலக்கணக் கீடுகளும் இதுவரை தமி ழகம் பெற்றிருந்த தொன்மையான தொழில்நுட்பம் தொடர்பான முந் தைய கருதுகோள்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளன. அந்த அடிப்ப டையில் தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டின் தொடக்கம் அல்லது இரும்பின் அறிமுகம் என்பது கி.மு. நாலாயிரத்தின் முற்பகுதியை சார்ந் தது எனவும், அதாவது இரும்பின் தொன்மை 5300 ஆண்டுகளுக்கு முற் பட்டது என்பதை அறிவியல் துணை
கொண்டு நிறுவப்பட்டுள் ளது. தொல்லியர்களின் இடையறாத முயற்சியின் வாயிலாக பெற்ற இந்த அண்மைக்கால சான்றுகளை பொதுமக்கள் முன்பாக வைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கி றேன் என கூறியுள்ளார்.
சிவகளை தொல்லியல் களம் பகுதியினை அரசு தனிகவனம் செலுத்தி மீண்டும் அங்கு அகழாய்வு பணிகளை தொடர வேண்டும். இங்கு அகழாய்வு செய்வதன் மூலம் இந்த பகுதியின் முக்கியத்துவத்தை உல கம் அறியச் செய்ய முடியும். சிந்து சமவெளி தொல்லியல் களத்தை விட பரந்து விரிந்து கிடக்கும் இந்த தொல்லியல் களம் ஆசியாவி லேயே மிகவும் பெரிய தொல் லியல் களமாக மாறக்கூடும். சிவகளையில் கண்டெடுக் கப்பட்டுள்ள தொல்பொ ருட்களை சிவகளையில் காட்சிப்படுத்திட வேண் டும். தமிழ்நாடு அரசு தொல்லியல் பல்கலை கழகத்தை இப்பகுதி யில் ஏற்படுத்திட வேண் டும். என தொல்லியல் ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்.
இந்த தகவலை உறுதி படுத்த 7 இடத்துக்கு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்திய தொல்லியல் துறை, அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி நிலையம், லக்னோ பீர்பால் பழைய ஆய்வகம், கல்பாக்கம் இந்திரா காந்தி அனு ஆராய்ச்சி நிலையம், அகமதாபாத் காந்திநகர் இந்திய தொழில் நுட்பநிறுவனம், பெங்களூர் நேஷனல் இன்ஸ்டீயூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடி, பாண்டிச்சேரி பிரஞ்ச் நிறுவனம், இதை தவிர வெளிநாட்டில் அமெரிக்கா பீட்டா ஆய்வகமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் கடந்த வருடம் சட்டமன்றத்தில் இந்தியர்களின் வரலாற்றை எழுதவேண்டும் என்றால் பொருநை ஆற்றங்கரையில் இருந்து தான் எழுத வேண்டும் என்று கூறினார். அது உண்மை என்பது போல சிவகளை அகழாய்வு முடிவு நம்மை பிரமிக்க வைக்கிறது.
சிவகளை அகழாய்வில் 400 செ.மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி எழுத்து கொண்ட பானை காலக்கணக்கீடு செய்த போது கி.மு.685 ஆண்டுகள் முந்தையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதுமக்கள் தாழி ஒன்றும் காலக்கணக்கீடுக்காக அனுப்பட்டது. அது கி.மு.1155 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர முதுமக்கள் தாழியில் கிடைத்த மூன்று இரும்பு பொருட்களின் காலக்கணக்கீடு தான் தமிழனை உலக அளவில் தலை நிமிரச் செய்துள்ளது. அதாவது கி.மு.2953, கி.மு.3256, கி.மு.3345 என மூன்று இரும்பு பொருட்களின் காலக்கணக்கீடும் தற்போதைய காலப்பணி சுமார் 5300 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் தான் இரும்பு பயன்பாடு தமிழ்நாட்டில் அதுவும் தென்தமிழ்நாட்டில் உள்ள பொருநை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிவகளையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் பெரிய அளவில் பேசப்படுகிறது.
இது தவிர ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு பொருட்களின் கால கணக்கீடும் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் கி.மு.2522 ஆம் ஆண்டு முதல் 2618 வரையில் பயன்படுத்தப்பட்டதாக இந்த காலகணக்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பார்க்கின்ற போது 4500 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிச்சநல்லூரில் இரும்பு காலங்கள் இருந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பு காலம் தொடங்கியது என்றும் கூறினார். தொடர்ந்து 5300 ஆண்டுகள் முன்னரே தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம். இது தமிழுக்கும், தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை. இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்து தான் எழுதப்பட வேண்டும் அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது. பொருநை ஆற்றங்கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர் தொழில் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை ஆய்வு முடிவுகள் வெளிக்கொண்டு வந்தது என்று கூறினார். அதைத் தொடர்ந்து பல சுவாரஸ்யமான வரலாற்று சம்பவங்களை பேசினார்.
( நதி வற்றாமல் ஓடும்)


